• Sunrise At: 5:12 AM
  • Sunset At: 6:40 PM
info@example.com +(00) 123-345-11

அல்லாஹ்வே விசாரணை செய்யப் போதுமானவன்.

“நாங்கள் முஸ்லிம்களைச் சேர்ந்தவர்களே. நாம் புதுமையான ஒரு பாதையையோ அல்லது இன் எறைக்கு சுமார் 30 வருடங்களுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட சைய்யித் குதுப் மற்றும் தகிய்யுத்தீன் அந்-நபஹானீ ஆகியோரின் சிந்தனைகளையோ அல்லது சுமார் 260 வருடங்களுக்கு முன் முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாபினால் தோற்றுவிக்கப்பட்ட சிந்தனைகளையோ அல்லது 750 வருடங்களுக்கு முன்னதாக இப்னு தைமிய்யாவினால் உருவாக்கப்பட்ட நவீன கொள்கைகளையோ பின்பற்றுபவர்களல்ல. முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாப் தனது சிந்தனைகளில் பலதை இப்னு தைமிய்யாவின் வழிகேடான சிந்தனைகளிலிருந்து எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நமது பாதையானது, உலகின் பல நூறு இலட்ச முஸ்லிம்கள் பின்பற்றி வரும் பாதையாகும்.

நம்பிக்கைக் கோட்பாடுகளில் அல் இமாம் அபுல் ஹஸன் அல்- அஷ்அரீ றஹிமஹுழ்ழாஹ் அவர்களின் கோட்பாடுகளின் பிரகாரமும், வணக்க வழிபாடுகள், இபாதாத் மற்றும் அமல் ரீதியான விடயங்களில் அல்-இமாம் முஹம்மத் இப்னு இத்ரீஸ் அஷ்-ஷாபிஈ றஹிமஹுழ்ழாஹ் அவர்களின் மத்ஹப் பிரகாரமும் பல கோடி முஸ்லிம்கள் செல்லும் பாதையே நம் பாதையாகும்.

நமது நாட்டிலும் சுமார் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் நம்பிக்கை கோட்பாட்டில் இமாம் அபூல் ஹஸன் அஷ்அரி றஹிமஹுழ்ழாஹ் அவர்களின் மத்ஹபின் பிரகாரமும் ,மார்க்க பிக்ஹு சட்டக்கலையில் இமாம் ஷாபிஈ றஹிமஹுழ்ழாஹ் அவர்களின் மத்ஹபின் பிரகாரமும் பின்பற்றி வாழ்ந்து வந்துள்ளனர்.

இமாம் அபுல் ஹஸன் அல்-அஷ்அரீ றஹிமஹுழ்ழாஹ் அவர்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் அஹ்லுஸ்ஸுன்னஹ் வல் ஜமாஅஹ்வின் இரு பெரு இமாம்களில் ஒருவராகும். அவர்கள் ஸஹாபாக்கள் மற்றும் தாபிஈன்களின் நம்பிக்கைக் கோட்பாட்டை ஒன்று திரட்டி ஆதாரங்கள் அடிப்படையில் தொகுத்தளித்தவராகும். ஹிஜ்ரி மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர்கள் ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டின் ஆரம்ப பகுதியில் மரணித்த அஸ் ஸலபுஸ்ஸாலிஹீன்களில் ஒருவருமாகும்.

ஷாபிஈ மத்ஹபனாது சுமார் 1250 வருடங்களுக்கு மேலாக உலக முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர் தொண்டு தொட்டும் கடைபிடித்து வரும் மிகப் பிரபல்யமடைந்த மத்ஹபாகும்.

நான்காம் கலீபாவான அலி றழியழ்ழாஹு அன்ஹு அவர்களை நபி என்றோ அல்லது அவர்கள்தான் அபூ பக்கர் றழியழ்ழாஹு அன்ஹு மற்றும் உமர் றழியழ்ழாஹு அன்ஹுஆகியோர்களை விட சிறந்தவர்கள் என்றோ கூறுபவர்களுமல்ல,

அத்துடன் வழிகெட்ட சிந்தனைப் பிரிவுகளான ஷீஆ, முஃதஸிலா, கவாரிஜ், முஜஸ்ஸிமா, முஷப்பிஹா, கதரிய்யா, காதியானியா, ஜஹ்மிய்யா, வஹாபிய்யா (அடிப்படைவாதம்), இஹ்வன்ஜிய்யா, தஹ்ரீரிய்யா, அத்வைதம் மற்றும் இவைகள் போன்ற வழி கெட்ட சிந்தனைகளை, நாம் பின் பிற்றுவபர்களோ, ஆதரிப்பவர்களோ அல்ல அவர்களை விட்டும் முற்றிலும் தூரமானவர்களே!.

ஒரு முஸ்லிமை இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றி குப்ரில் வீழ்த்திவிடும் குப்ரிய்யத்தான வார்த்தைப்

பிரயோகங்கள், குப்ரிய்யத்தான நம்பிக்கைகள் மற்றும் குப்ரியத்தான செயல்கள் பொன்றவைகளை தெளிவுபடுத்தி முஸ்லிம்களை அவைகளை விட்டும் தூரப்படுத்துவதில் நாம் ஒன்றும் புதிய பாதையொன்றை வகுக்கவில்லை. மாறாக நாற்பெரும் மத்ஹபுகளைச் சார்ந்த இமாம்கள் தங்களது நூற்களில் எச்சரித்தைப் போன்றே நாமும் மக்களை அவற்றை விட்டும் எச்சரித்து வருகிறோம்.

இது தொடர்பாக அல்-இமாம் முர்தழா அஸ்-ஸபீதி றஹிமஹுழ்ழாஹ் அவர்கள் “இஹ்யாஹ் உலூமித்தீன்” என்ற கிரந்தத்தின் விரிவுரையில் பின்வருமாறு கூறியிருப்பது அதற்கானதொரு சான்றாகும்.

“நான்கு மத்ஹபுகளைச் சார்ந்த பல இமாம்கள் குப்ரை ஏற்படுத்தும் சிந்தனைகள், வார்த்தைப் பிரயோகங்கள் பலதை எச்சரிக்கும் விதமாக பல நூல்களை தொகுத்திருக்கின்றனர்” எனக் கூறியுள்ளார்கள்.

நாம் எந்தவொரு அரசின் பண உதவி பெற்று அவர்களுக்கு இசைவாக கருமமாற்றிவருவோருமல்ல.

எந்தவொரு அரசின் பண உதவியை பெறுவோருமல்ல. அல்லாஹ்வே இதனை நன்கறிந்தவன்.

மேற்குறித்த நமது பாதையை விடுத்து, நம்மை வழிகேடான வேறு சிந்தனைகளைக் கொண்டவர்கள் என வாதிடுவோர், விசாரணை தினத்தின் அதிபயங்கரமான அல்லாஹ்வின் விசாரணையை மறந்து விடவேண்டாம்.”

இயக்குனர் சபை தலைவர், மற்றும் அதிபர் உஸ்தாத்மார்கள்,

காத்தான்குடி ஜாமிஅதுல் ஜமாலிய்யா அறபுக்கல்லூரி

பிரதான வீதி காத்தான்குடி-06

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *

Copyright @2023 All Rights Reserved by Jamiyathul Jamaliyya