• Sunrise At: 5:12 AM
  • Sunset At: 6:40 PM
info@example.com +(00) 123-345-11

மீலாத் விழா தோன்றிய வரலாறு…..

எம் பெருமானார் முஹம்மத் ﷺ அவர்களின் பிறந்த நாளை விழாவாகக் கொண்டாடுவது மார்க்கத்தில் அங்கீகரிக் கப்பட்டதும், குர்ஆன், ஹதீஸுக்கு நேர்படும் வகையிலும் உருவாக்கப்பட்ட ஒன்றுமாகும்.

இச்செயல் முஹம்மத் ﷺ அவர்களுடைய காலத்திலோ அவர்களைத் தொடர்ந்து வந்த ஆரம்ப நூற்றாண்டுகளிலோ விழாவாக நடைபெற்று வரவில்லை. ஆனாலும் முஹம்மத் ﷺ அவர்களின் பிறந்த நாளை அந்த புனித மாதத்தை விழாவாக கொண்டாடும் நடைமுறை ஹிஜ்ரி ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியிலே உருவாக்கப்பட்டது.

அதனை முதல் முதலாக “அல் முளப்பர்”அபூ ஸஈத் அல்கவ்கப்ரீ என்ற இர்பில் நாட்டு மன்னரே உருவாக்கினார். அவர்கள் மார்க்க அறிஞராகவும், பயபக்தியுடையவராகவும், வீரராகவும் திகழ்ந்தார்கள். இவ்வைபவத்திற்காக ஹதீஸ்கலை அறிஞர்கள் பலரையும், பல ஸுபியாக்களையும் ஒன்றுதிரட்டினார்கள்.

மேலும் இச்செயலானது முழு உலகிலும் வாழ்ந்த பல இஸ்லாமிய அறிஞர்களால் வரவேற்க்கப்பட்டது. அவர்களில் இமாம், அல் ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானீ அவர்களும், மேலும் அவர்களுடைய மாணவர் இமாம் ஸஹாவீ அவர்களும், அல் ஹாபிழ், இமாம் ஸுயூதீ, மற்றும் “அத்தன்வீர் பீ மவ்லிதில் பஷீரின் நதீர்” எனும் கிரந்தத்தை கோர்வை செய்த இமாம் இப்னு திஹ்யா றஹ்மதுழ்ழாஹி அலைஹிம் போன்றோரைக் குறிப்பிடலாம். இவர்களும் இன்னும் பல இஸ்லாமிய பேரறிஞர்களும் இதனை நற்செயலாக அங்கீகரித்துள்ளனர்.

மேலும் இதுபோன்ற நிகழ்வுகளை வழிகேடர்களைத் தவிர வேறு யாரும் விமர்சனம் செய்யமாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Lorem Ipsum

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *

Copyright @2023 All Rights Reserved by Jamiyathul Jamaliyya