• Sunrise At: 5:12 AM
  • Sunset At: 6:40 PM
info@example.com +(00) 123-345-11

காத்தான்குடி 04 பிரதான வீதி அருகே அடக்கம் செய்யப்பட்டிருக்கும் ஜாமிஅதுல் ஜமாலியாஅரபுக்கல்லூரியின்  அருகே(றாஜா ஆலிம் மக்காம் உள்ளே) அஷ் ஷெய்கு றாஜா ஆலிம் வலியுழ்ழாஹ்,அஷ் ஷெய்கு முஸ்தபா ஆலிம் வலியுழ்ழாஹ், ஹாமித் லெப்பை ஆலிம் வலியுழ்ழாஹ் ஆகியோர் காத்தமா நகரில் அடங்கியுள்ள **அவ்லியா முத்துக்களில் மூன்று முத்துக்களாகும்**என்று கூறினால் அது மிகையாகாது.

அஷ்ஷைஹூல் காமில் அல் ஆலிமுல் பாழில் *முஹம்மத் மீரான் ஸாஹிப் ஸித்தீகிய்யி மஹ்தூமிய்யி *றாஜா ஆலிம் வழியுழ்ழாஹ்(மறைவு 1908) இவர்கள் தாய் வழி தொடர்பால் றஸூலே கரீம் முஹம்மத் ஸல்லழ்ழாஹூ அலைஹிவஸல்லம் அவர்களினதும் தந்தை வழித் தொடர்பால் அபூபக்ர் அஸ் ஜித்தீக் றழியழ்ழாஹூ அன்ஹூ அவர்களின் 38வது தலைமுறையினரும் ஆவார் . கௌதூல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றழியழ்ழாஹூஅன்ஹூஅவர்களிடம் நேரடியாக ( பின்தொடர்ந்த) பைஅத் பெற்ற ஐந்தாவது ஷைஹின் பரம் பறையில் வந்நவர்கள் தான் இவர்கள். இந்தியாவின் கீழக்கறையிலிருந்து புனித இஸ்லாத்தின் பால் மக்களை வழிநடத்தும் புனிதமான என்னத்துடன் இலங்கையில் திருகோணமலைக்கு இவர்கள் முதலில் வந்தார்கள்.

இவ்வாறு வந்த ஷைஹ் அவர்கள் காத்தான்குடிக்கு காட்டு ரோட்டு என்ற காரணப் பெயரால் அழைக்கப்பட்ட மனல் பாதை வழியே ஆல், அரசு, வாகை, ஆமணக்கு, முந்திரி ஆகிய மரங்களால் சூழப்பட்டு வனமாகக் காட்ச்சியளித்த சூழலில் தான் தற்பொழுது ஜாமிஅதுல் ஜமாலியா அமைந்திருக்கும் இடத்தில் 1827ல் கலிமண் ஓலைக் குடிசையில் குர் ஆன் மத்ரஸாவை சிறுவர்களுக்கு நிருவினார்கள். பெரியவர்களுக்கு மார்க்க உபன்னியாசம் நிகழ்த்தவும் திக்ர் மஜ்லிஸ் நடத்தவும் தரீகா நடவடிக்ககைளை மேற் கொள்ளவும் அவ்விடத்தை பயன்படுத்தினார்கள். மக்களுக்கு மார்க்கக் கல்வியையும் ஞானத்தையும்போதித்து “காதிரிய்யா ஜமாலிய்யா” தரீக்காவின் ஷைஹாகவும் திகழ்ந்தார்கள். இவர்களால் பல உலமாக்கள் உருவானார்கள். அதில் சிரேஷ்டமான மாணவர் அவர்களுடைய புத்திரர் முஹம்மது முஸ்தபா ஆலிம் ஸித்தீக்கீயி அவர்களும் அடங்குவார்கள்.

காத்தான்குடியில் அக்காலத்தில் அநேக முரீதீன்களுக்கு பைஅத் கொடுத்து வழி காட்டிய மஹான் றாஜா ஆலிம் அவர்கள் மார்க்கத்தீரப்பு பத்வா அளிப்பதில் மிகவும் வள்ளவராகவும் ஆற்றல் வாய்ந்தவர்களாகவும் இருந்தார்கள். அவர்களின் காலத்தில் முஸ்லிம்கள் சம்பந்தமாக ஏற்பட்ட ஒரு சொத்துப் பிரச்சனையில் அக்கால உலமாக்கள் சரியான தீர்ப்பை கூற முடியாது தத்தளித்த சந்தர்ப்பத்திலேதான் அவர்கள் அல் குர்ஆன் ஹதீஸ்,இஜ்மாஉ ,கியாஸ்,ஷாபிஈ மத்ஹப்,அஷ்அரீ அகீதாஹ்வை  அடிப்படையாக் கொண்டு குறித்த நீதிபதிக்கு விளங்கப்படுத்தினார்கள். இதனாலேயேதான் அந்த ஆங்கில அரசின் கீழ் கடமையாற்றிய நீதிபதி இவர்கள் இவர்களை “றாஜா ஆலிம்” என்ற சிறப்புப் பெயரால் அழைக்க அக்கால உலமாக்களும் “அமீர் ஆலிம்” என்ற சிறப்புப் பெயரால் அழைக்கலாயினர்.

தொடரும்……

Lorem Ipsum

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *

Copyright @2023 All Rights Reserved by Jamiyathul Jamaliyya